Designed by Iniyas LTD
திறந்த ஜீப்பில் வீதி வீதியாக ஓட்டு கேட்டு செல்கிறார் குஷ்பு
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக இன்று காலை 6.40 மணிக்கு இருவரும் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருவரும் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர். டெல்லி புறநகர் பகுதிகளான ஆர்.கே.புரம், நொய்டா ஆகிய இடங்களில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். குறிப்பாக தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திறந்த ஜீப்பில் வீதி வீதியாக செல்கிறார்கள். 2 நாட்கள் பிரசாரத்தை முடித்துவிட்டு 3ம் திகதி, சென்னை திரும்புவார்கள்.