Designed by Iniyas LTD
திலீபனின் நினைவுநாளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டுகோள்!
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவுநாளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்குமாறு ஜனநாயக போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,எமது இனத்தின் விடுதலைக்காக, உலகின் மனசாட்சியை உலுக்கும் வகையில் நீராகாரம்கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை துறந்த திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாள் நாளை தொடங்குகின்றது.தொடக்கநாள் நிகழ்வினை ஜனநாயக போராளிகள் கட்சியினர் திலீபன் உண்ணா நோன்பிருந்த நல்லூரிலேயே அனுஸ்டிக்க ஏற்பாடாகியுள்ளது.தாயகத்திலும், புலம்பெயர்ந்து வாழும் எம் தாயக உறவுகளும் ஆரம்ப நிகழ்வினை அனுஸ்டிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நினைவேந்தல் நடைபெறுகின்ற காலத்தில் கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளைச் சுமந்து உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.