தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

busதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக வருகிற அக். 26 முதல் 28-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசல், காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வேலூர் மற்றும் வேலூர் வழியாக பிற பகுதிகளிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையிலிருந்து வேலூர் வழியாக திருப்பத்தூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஒசூர், தருமபுரிக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும்.

ஏற்கெனவே சென்னையிலிருந்து வேலூர் வழியாகச் செல்ல முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...