தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தீவிரவாதிகள் ஊடுருவல் – டெல்லியில் பாதுகாப்பு

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாக உளவுதுறை தெரிவித்துள்ளதை அடுத்து டெல்லி, குஜராத், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  check

குஜராத் மாநிலத்துக்குள் கடல் வழியாக பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பேர் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் 10 பேரும், டெல்லியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.   இதையடுத்து, முக்கிய இடங்கள், கட்டடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் முக்கியமான பகுதிகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   மகா சிவராத்திரி திங்கள்கிழமை கொண்டாடப்படுவதால், பிரசித்தி பெற்ற சோமநாதர், ஜுனாகட் மற்றும் அக்ஷர்தாம் கோயில்களுக்கு பக்தர்கள் அதிகம் வருவார்கள். இதனால், அக்கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...