தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

துருக்கியில் இன்று பொது வாக்கெடுப்பு!

201704161124145797_Turkey-referendum-Historic-vote-on-presidential-powers_SECVPFதுருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தம் செய்ய எர்டோகன் முடிவு செய்தார். அதை தொடர்ந்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அதுகுறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க இன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Comments
Loading...