தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

துருக்கி தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ எஸ் பொறுப்பேற்பு!

464abf73-c24a-45eb-8d58-43a9e12bf3ad_S_secvpfதுருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்று அந்நாட்டு உள்துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் வணிக வீதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் மூன்று பேர் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும் இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்று துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து துருக்கி உள்துறை மந்திரி எப்கான் அலா கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய துருக்கி நாட்டைச் சார்ந்தவர் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக என்று தெரிவித்தார். 

மேலும், “ஆதரங்கள் தம்மிடம் உள்ளது, அவர் டேனிஷ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர். தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் மெக்மெத் ஓஸ்டர்க் (24). இவர் சிரியா எல்லைப்பகுதியை ஒட்டிய தெற்கு துருக்கியின் காஜினியண்டெப் நகரை சேர்ந்தவர்” என்றார்.

Comments
Loading...