Designed by Iniyas LTD
தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாட்டி மீது அசிட் வீச்சு!
கோவாவில் இன்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் மற்றும் அவரது பாட்டி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவாவின் மாபுசா நகரின் அருகேயுள்ள குய்ரிம் கிராமத்தில் உள்ள தங்களது வீட்டுக்குள் இன்று காலை ஒரு இளம்பெண்ணும் அவரது பாட்டியும் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்மநபர் ஜன்னல் வழியாக அவர்கள் இருவர் மீதும் மிக வீரியமான திராவகத்தை ஊற்றிவிட்டு தப்பியோடினார்.
முகம் மற்றும் உடலின் பிறபாகங்கள் திராவக வீச்சில் உருக்குலைந்த நிலையில் கதறித் துடித்த அவர்கள் இருவரையும் காப்பாற்றிய அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் மாபுசா நகர அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்கள்மீது திராவகத்தை வீசிய மர்மநபர் யார்? இந்த தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.