Designed by Iniyas LTD
##தூத்துக்குடியின் துயர்வலி##
ஏவலாளியின் கூலிக்காய்
உன் குடியை நீ அழிக்கும்
பாதகம் புரிந்துவிட்டாயே…!
காவலாளியென்றுனை நினைத்தே
கயவர்க்கும் அஞ்சிடா நின்ற மனிதரை
கருணையின்றிக் கொன்று விட்டாயே..!
பாவமேதும் புரியா பைந்தமிழ் இனத்தைப்
பாடையில் அனுப்ப நினைத்த சாபம்
பதில் சொல்ல முடியுமா பாரதப் பேயே..!
கோவமும் கொப்பளிக்கும், கொடுஞ்செயல்நின்றெதிர்க்கும் மானத்தமிழனை என்னவாய்
நினைத்தாய் நீயே!
சாபம் எமக்கில்லை சாக்காடு எதிரிக்கென்றுனைக் காக்கும் வரம் கொண்டு போரிடும் மறம் இன்னமும் தொலைக்கவில்லை தமிழ்நாடே தாயே!
-காந்தள்-
*பச்சை யூனியைந்த வேற்படைகள் வந்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!* -பாரதி-
*எங்கள் சோதரர் துடைக்க ஓரணியில் சேருவோம்*
