Designed by Iniyas LTD
தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது சி.பி.சி.ஐ.டி.
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதோடு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை முழுவதும் ரகசியமாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்தவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.