தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென்னிந்திய மாநிலங்களுடன் முதலீடு தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்!

160702064002_banak_governer_512x288_bbc_nocredit-450x253வட மாகாணத்தின் நியம வளர்ச்சி 2015ஆம் ஆண்டு 12.1 வீதமாக இருந்திருக்கின்றது. சராசரித் தேசிய வளர்ச்சி 7 வீதமாக இருக்கின்ற போது வடமாகாணத்தின் நியம வளர்ச்சி 0.1 வீதமாக இருக்கின்றது.

இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் வடமாகாணம் 3.5 வீதம் பங்களிப்புச் செய்கிறது. எனவே, தென்னிந்திய மாநிலங்களுடன் முதலீட்டுத் தொடர்புகளை வடமாகாணம் அதிகரிப்பது நன்மை பயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்தில் தேசிய நல்லிணக்கத்தின் மிக முக்கிய பகுதியாக ஒன்றிணைக்கப்பட்ட நாட்டில் வடமாகாணத்தின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

வடமாகாணத்தின் பொருளாதாரம் அரசினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற பெளதீக, சமூக உட்கட்டுமானங்கள் ஊடாக தனியார் துறையினரின் முதலீட்டுக்களை ஊக்குவிப்பதன் மூலம் வடமாகாணத்தின் முதலீட்டுச் சூழலை வளப்படுத்த முடியும்.

அந்த முதலீட்டுச் சூழல் வடமாகாணத்தின் விசேட தேவைகளை வரையறுக்கும் வகையில் அமைய வேண்டும். எனவே, இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

வட மாகாணத்தின் விவசாயத்துறை, மீன்பிடித்துறை, வர்த்தகத்துறை ஆகியன வளர்ச்சி கண்டு வருவது நல்லதொரு அறிகுறியாகவுள்ளது. வடமாகாணம் தேசிய விநியோகக் கட்டமைப்பிலே முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக மாறி வருகிறது.

புதிய தொழில் முறையாக உல்லாசப் பிரயாணத்துறை திட்டங்கள் வகுக்கப்படக் கூடிய வாய்ப்புக்களிருக்கின்றன. வவுனியா மற்றும் கிளிநொச்சியில் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தனியார் துறை மூலம் ஊக்குவிக்கப்படும் முதலீடுகள் இலங்கையில் துரிதப்படுத்தப்பட வேண்டும். கிழக்கு, தென்கிழக்காசிய நாடுகளில் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி மூலமே 90 வீதமான வருமானம் கிடைக்கிறது.

ஆனால், இலங்கையில் மொத்தத் தேசிய உற்பத்தியில் 17 வீதமான வருமானமே ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. தற்போது கடன் சுமையில் அரசாங்கம் இருக்கின்றது.

ஆகவே, கடன்படு சுமையைத் தவிர்த்துத் தேசிய பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்ப நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தேசிய மட்ட முதலீட்டிற்கான சவால்களும் சந்தர்ப்பங்களும், வடமாகாண முதலீட்டிற்கான சவால்களும் சந்தர்ப்பங்களும் தொடர்புபட்டுள்ளன.

சமூக அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் இடையிலுள்ள இடைவெளி காணப்படும் நிலையில் அவற்றுக்கு இடையில் சமநிலை பேண வேண்டியது அவசியம்.

நல்ல சமூகக் குறிகாட்டிகளை இலங்கையைச் சேர்ந்த சமூகங்கள் கொண்டிருக்கின்ற போதும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும், கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களுக்குமிடையே தொடர்பின்மை நிலவுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...