தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென்னிலங்கை மீனவர்கள் கடற்படைத் தளத்தினை அண்டிய பகுதிகளில் தொழிலிலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தால் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் கடற்படைத் தளத்தினை அண்டிய பகுதிகளில் வாடி அமைத்து மீண்டும் தொழிலிலில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறித்த இடங்களில்  கடந்த காலத்தில்  தமிழ் மீனவர்களின் படகுகள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்  தென்னிலங்கை  மீனவர்கள்   தொழில் புரிந்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் வெளியேற்றப்பட்ட மீனவர்களும் அப்பகுதியில் தொழில்லில் ஈடுபடுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைப் பரப்பிற்குள் உள்ள அரச நிலத்தில்  அனுமதி இன்றி வாடி அமைத்துத் தொழில் புரிந்த தென்னிலங்கை  மீனவர்களிற்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது..
இந்த நிலையில் அவர்களை  உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு       கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி  மருதங்கேணி , தாளையடிப் பகுதிகளில் இருந்து வெளியேறிய 8 நிறுவனங்களிற்கும் சொந்தமான 32 வாடிகளில் அமைத்து தொழில் புரிந்தவர்களே அங்கிருந்து  வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அங்கிருந்த சுமார் 850ற்கும் மேற்பட்ட பிற மாவட்ட மீனவர்கள் வெளியேறும் நிலையில் குறித்த நிறுவனங்களிற்கு முல்லைத்தீவு சாலைப் பகுதியிலும் கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி உண்டு.
இதனால் வடமராட்சியில் இருந்து வெளியேறிய பிற மாவட்ட மீனவர்கள் தற்போது சாலைப் பகுதியில் வாடிகளை அமைத்துவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ள்ளது.
Comments
Loading...