Designed by Iniyas LTD
தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ்
தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு 20 பேர் உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆய்வு
கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 67 பேரின் இரத்தம் மற்றும் சளி மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கடந்த தினம் அனுப்பிவைக்கப்பட்டது.
குறித்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதாரப்பிரிவின் தலைவர்களின் பேச்சுவார்த்தையொன்று இன்று கராபிட்டி போதனா மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 79 பேர் கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்மாகாணத்தில் இதுவரை 11 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
