Designed by Iniyas LTD
தெறிக்கவிடப்போவது யார்? இலங்கையுடனான மோதலில் களமிறங்கியது இந்தியா!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த லீக் ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தொடக்க ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அதே உத்வேகம் மற்றும் உற்சாகத்துடன் களமிறங்கி உள்ளது. இந்த ஆட்டத்திலும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியில் தரங்கா, கபுகேதரா, சுகுகே நீக்கப்பட்டு, மேத்யூஸ், திசரா பெரேரா ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், பாண்டியா, டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், பும்ரா.
இலங்கை அணி: டிக்வெல்லா, குணதிலக, மென்டிஸ், மேத்யூஸ், சண்டிமல், குஷால் பெரேரா, குணரத்னே, திசரா பெரேரா, லக்மல், மலிங்கா, பிரதீப்.