Designed by Iniyas LTD
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை-அரக்கோணம் பிரிவில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், திருத்தணியில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் திருத்தணி-சென்னை சென்டிரல் மின்சார ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே விரைவு மின்சார ரெயில் பாதையில் இயக்கப்படுகிறது.
எனவே, இந்த ரெயில் செஞ்சிப்பணம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும். இதே போன்று, அரக்கோணத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-சென்னை சென்டிரல் மின்சார ரெயில், காலை 11.15 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-ஆவடி மின்சார ரெயில், மதியம் 12 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-சென்னை சென்டிரல் மின்சார ரெயில் ஆகிய ரெயில்களும் இன்று முதல் 26-ந் தேதி வரை திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே விரைவு மின்சார ரெயில் பாதையில் இயக்கப்படுகிறது.
எனவே, இந்த ரெயில்களும் செஞ்சிப்பணம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.