Designed by Iniyas LTD
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிப்பு
கலர்ஸ் ஒப் கரேஜ் டிரஸ்ட் (Colours of Courage Trust) இனால் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெல்லிப்பழை டிரைல் புற்றுநோய் வைத்தியசாலை எதிர்வரும் 19 ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இதில் உள்ள இரு விடுதிகளுக்கு முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைத் தலைவர் ரத்னா சிவரத்னம் மற்றும் மெரோபி சிவரத்தினம் (Ratna Meropi Sivaratnam) ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
தேவேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரை பாதயாத்திரை மேற்கொண்டு புற்றுநோய் வைத்தியசாலை அமைக்க நிதி திரட்டப்பட்டது. அதேவேளை 3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.