Designed by Iniyas LTD
தேங்காய் திருடியவர் துப்பாக்கியால் சுட்டு பலி!
தேங்காய்களை திருடுவதற்காக வந்ததாக கூறப்படும், தேங்காய் பறிப்பவர், துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான சம்பவமொன்று வெலிவேரிய இம்புல்கொட பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். தென்னந்தோட்ட காவலாளியால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.