தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசியத்தலைவரின் பிறந்த நாள் லண்டன் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது பிறந்த நாளை வடமேற்கு லண்டன் மக்கள் நேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியக் கிளையின் இளையோர் அமைப்பான TYCA இன் ஏற்பாட்டில் 227 Preston Road, Wembley, HA9 8NF இல் அமைந்துள்ள TGTE Office இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் முதல் முதியோர் வரையாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக அதிகளவான இளையோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.london-birthday

மண்டப வாசலில் நிறைகுடமும், தேசியத்தலைவரின் முழு அளவிலான பிரமாண்ட பனரும் வைக்கப்பட்டிருந்தது. அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் மங்கள விழக்கினை மகளிர் ஏற்றிவைத்த பின் உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்வில் வருகை தந்திருந்த மிகச்சிறியவர்களான இரு சிறுவர்கள் கேக் வெட்டி வயதில் முதியவரான ஒரு அம்மாவிற்கு ஊட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து இளையோர் உட்பட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மக்கள் பிரதிநிதிகள் பலரும் தேசியத் தலைவனை வாழ்த்தியும், தொடர்ந்து தமிழீழ விடுதலை நோக்கி தலைவனின் வழியில் பயணிக்க வேண்டியது தொடர்பாகவும் உரையாற்றினர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கேக், இனிப்புவகை என பலவற்றை வழங்கியதோடு, வான வேடிக்கையையும் நடத்தி மகிழ்ந்தனர்.

Comments
Loading...