Designed by Iniyas LTD
தேசியப் பாடகன்

இன்றும்
எதிரிகள் உனது குரலுக்கு அஞ்சினர்
எதிரிகள் உனது பாடல்களுக்கு அஞ்சினர்
ஆனாலும்
இருதயம் வெடித்து முழங்கின
வீர யுகமொன்றில் நீ இசைத்த பாடல்கள்
உள்ளே நெருப்பெரியும் குரலில்
தாய் மண்ணை நிறைத்த
தேசியப் பாடகன் செல்கிறான்
தொலை தூரத்திலிருந்து
தேசத்தின் பாடலை இசைக்க.
குரலற்றவர்களின் பாடலைப் புதைத்தோம்
மாபெரும் தாகம் நிரம்பிய மண்ணில்.
சாந்தனுக்கு
– தீபச்செல்வன்