Designed by Iniyas LTD
தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை….
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும்.
தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு வருவதனை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கடவுச்சீட்டை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டை பெறுவதற்காக மக்கள் கொழும்பிற்கு சமூகமளித்து அலைவதை தடுக்கும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த கிளை அலுவலகங்கள் ஊடாக ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் மாவட்டச் செயலகங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.