தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினதில் இரா சம்மந்தன் கலந்துகொள்கின்றார்?

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்களின் நினைவு துபிக்கு அருகில் இடம்பெற உள்ளது. இவ் நிகழ்வில் எதிர் கட்சி என்ற ரீதியில் கூட்டமைப்பின் இரா சம்மந்தன் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம் தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை பிற்பகல் 2.00 மணி முதல் 07.00 மணி வரை சில பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதுடன் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி பொல்துவ சந்தியில் இருந்து பெலவத்தை சந்தி வரையான பாராளுமன்ற வீதி, கிம்புலாவல சந்தியிலிருந்து சுற்றுவட்டம் ஊடாக பாலந்துன சந்தி வரையான ஜப்பான் நட்புறவு வீதி, பாலந்துன சுற்றுவட்டத்திலிருந்து கியன் ஹேம் சுற்றுவட்டம் ஊடாக பொல்துவ சந்தி வரையான வீதி மற்றும் பெலவத்தை சந்தியிலிருந்து கியன் ஹேம் ஊடாக பொல்துவ சந்தி வரையான வீதிகளில் இந்த விஷேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக நாளைய தினம் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments
Loading...