Designed by Iniyas LTD
தேமுதிகவை இழுக்க பேரம் பேசிய திமுக – வைகோ காட்டம்
தேமுதிகவை கூட்டணிக்கு இழுப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி 500 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மையென்று கூறினார். திமுக சார்பாக 500 கோடி ரூபாயும், 80 சீட்டும் தருவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி துண்டு சீட்டில் பேரம் பேசியபோதும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதனை உதறி தள்ளிவிட்டார் என்றும் வைகோ தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமாரை மீண்டும் அழைத்துப் பேசுவது அக்கட்சியின் தோல்வி பயத்தைக் காட்டுவதாகவும் வைகோ கூறியுள்ளார். தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி மாநாடு ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.