Designed by Iniyas LTD
தேர்தலுக்காக பொய்ப்பிரச்சாரம் செய்யும் கூத்தமைப்பு!
வலிகாமம் வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்பட்டதாக அரசு பொய்பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளது. அதற்கு கூட்டமைப்பு தலைமை ஒத்தோடிவருவதாகவும் தெரிவித்துள்ளதுடன் துறைமுகம் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. ஆனால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பொய்ப் பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் அக்குழு அறிவித்துள்ளது.
மாவை சேனாதிராசா போன்ற அரசியல்வாதிகள் தமது காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அமைதியாகிவிட்டனர்.அவர்கள் இப்போது அரசிற்கு முண்டுகொடுக்கின்றனர்.
உண்மையில் மயிலிட்டி துறைமுகத்தையும் அதனை அண்மித்த பிரதேச மக்களின் காணிகளையும் முழுமையாக விடுவிக்க வேண்டுமென மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தினரும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் வலிகாமம் வடக்கின் பல பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக உள்ளது. எனினும் தற்போது அவற்றில் சில பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மயிலிட்டி துறைமுகமும் அண்மையில் விடுவிக்கப்பட்டு அப்பகுதி மக்களும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் நடக்கின்றன.
உண்மையில் மயிலிட்டித் துறைமுகப் பகுதி விடுவிக்கப்பட்ட போதும், துறைமுகம் முழுமையாக விடுவிக்கப்படாது படையினர் பாதுகாப்பு வேலிகளை அமைத்து அரைவாசிப் பகுதியை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றனர். அதே போன்றே மயிலிட்டிப் பிரதேசம் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் பல பகுதிகள் விடுவிக்கப்படாது படையினர் வசமே தற்போதும் உள்ளது.