Designed by Iniyas LTD
தேர்தல் குறித்த புகார்களை அளித்த புதிய அழைப்பு சேவை எண்ணை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது
சென்னையில் ரிப்பன் பில்டிங்கில் தேர்தல் குறித்த புகார்களை அளித்த புதிய அழைப்பு சேவை எண்ணை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும் இந்த அவசர அழைப்பு எண் ( 18004257012) பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் தேர்தல் விதிமீறல்கள் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களையும் இந்த எண்ணில் பெறலாம். அரசியல் கட்சிகளும் இந்த சேவையை பயன்படுத்தலாம் என தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி மார்ச் 8 முதல் மார்ச் 16 வரை 387 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இவைகளில் 223 புகார்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்புடையதாகும். 124 புகார்கள் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் பற்றியதாகும்.