தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேர்தல் சட்டதிட்டங்களை மீறி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை கவரும் வகையில் அரச துறையில் தொழில் நியமனங்களை வழங்கி பொதுமக்களின் வாக்குகளை கவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.election_CI

தேர்தல் சட்டதிட்டங்களை மீறி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனங்களை வழங்க இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கண்டி மாநகர சபையில் காணப்படும் 300 வெற்றிடங்களுக்கு எதிர்வரும் ஜனவரி 01ம் திகதி தற்காலிக அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

மாநகர ஆணையாளர் சந்தன தென்னக்கோன் ஊடாக இவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கண்டி மேயரின் தலைமையில் நகர மண்டபத்தில் நடைபெறும் வைபவமொன்றில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...