Designed by Iniyas LTD
தேர்தல் பிரச்சாரங்கள் வடக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தெற்கில் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் இத் தேர்தல் பிரச்சாரங்கள் வடக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஐனாதிபதி மகிந்தராஐபக்ஸ இன்று காலை முல்லைத்தீவிற்கு விஐயம் செய்யவுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐனாதிபதியின் விஐயத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளையில் ஐனாதிபதி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு அரசஉத்தியோகத்தர்கள் முதல் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டுமென வற்புறுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது.
ஏதிர்வரும் எட்டாம் திகதி ஐனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத் தேர்தல் பிரச்சாரங்கள் தெற்கில் பல்வேறு இடங்களிலும் மாறிமாறி நடைபெற்றுவருகின்றது. இதன் போது வன்முறைகளும் பல இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் இத்தேர்தல் பிரச்சாரம் வடக்கில் ஆரம்பிக்கப்படாதிருந்த போதிலும் இத்தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ நாளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஐயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐனாதிபதியின் இந்த விஐயத்தை முன்னிட்டு வீதிகள் சந்திகள் மற்றும் ஐனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தை அண்மித்த பகுதிகள் எங்கும் இரானுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதுடன் பொலிஸாரும் தீவிரசோதனைகள் மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிப்படுகிறது.
மேலும் ஐனாதிபதியின் இத் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அதிகளவான மக்களைக்கொண்டுவரும் நோக்கில் அங்குள்ள மக்கள் அனைவரையும் கூட்டத்தில் சமூகமளிக்குமாறும் பலவழிகளிலும் மிரட்டி வற்புறுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது.
இதே போன்றே மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகள் அனைவரும் வருகை தரவேண்டுமெனறும் கோரப்பட்டுள்ளது. அத்தோடு அண்மையில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுமென்றும் ஆயினும் கூட்டத்தில் கலந்துகொள்ளாத உத்தியோகத்தர்களுக்கு நியமனம் நிறுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டுள்ளது.