தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேர்தல் பிரச்சாரம் குறித்த சட்டங்களில் திருத்தம் செய்ய உத்தேசம்

தேர்தல் விதிமீறல்களை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, எதிர்வரும் ஜனாதிபதி அல்லது பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரம் தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்த உத்தேச சட்டத் திருத்தம் குறித்த நகல் ஆவணத்தை தயாரித்து வருகின்றார். அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக அண்மைக் காலமாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன. அரசாங்கத்தின் தேர்தல் விதி மீறல்களை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என குற்றம்சுமத்தியிருந்தன.sri-lanka-president-rajapaksa-budget-2013-4

இந்த குற்றச்சாட்டுக்களை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் தேர்தல் பிரச்சாரம் குறித்த சட்டங்களில் திருத்தம் செய்ய உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் காலங்கில் அரசாங்கம் முழு வீச்சில் அரச சொத்துக்களையும் அரசாங்க அதிகாரிகளையும் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அடக்குமுறைகள் அச்சுறுத்தல்களை மேற்கொள்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் தடையின்றி பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தேர்தல் காரியாலயங்கள், சுரொட்டிகள், வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தகவல்கள் போன்றன தொடர்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியும் தேர்தல் சட்ட திருத்தம் குறித்து வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், புதிய சட்டத் திருத்தங்கள் ஜனாநாயக தேர்தல் பொறிமுறைமைகளை மேலும் பலவீனப்படுத்தக் கூடுமென தேர்தல் ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Comments
Loading...