Designed by Iniyas LTD
தேவ்யானி தற்போது வகித்து வரும் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அளித்த பேட்டியால் தேவ்யானி கோப்ரகடேவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய துணை தூதராக பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே.
போலி விசா மற்றும் பணிப்பெண் விவகாரம் தொடர்பாக தேவயானியை அமெரிக்க பொலிசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அனுப்பட்ட அவருக்கு, வெளியுறவுத்துறையைச் சேர்ந்த பங்குதாரர் அபிவிருத்தி பிரிவின் இயக்குனராக பதவி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் தேவ்யானி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், எனது குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தவர்கள். எனவே அவர்கள் அமெரிக்கர்கள் என்று தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து தேவ்யானி தற்போது வகித்து வரும் பதவியில் இருந்து அதிரடியாக வெளியுறவுத்துறையால் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வேறு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.