Designed by Iniyas LTD
தைவானுடன் தகவல் தொடர்பை துண்டித்தது சீனா!
தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும், அதைத் தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாகத்தான் சீனா பார்க்கிறது. தைவானில் கடந்த மாதம் முதல் பெண் அதிபராக சாய் இங்க் வென் பதவி ஏற்றார். அவர் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த சீனாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சீனா தன் போக்கை மாற்றிக்கொள்ள வில்லை.
ஒரே சீனா என்ற கொள்கையை தைவான் மதிக்கவில்லை, அங்கீகரிக்கவும் இல்லை என சீனா கருதுகிறது. அதுமட்டுமின்றி முழு சுதந்திரம் பெறுவதற்கான நடவடிக்கையில் சாய் இங்க் வென் ஈடுபடுவார் எனவும் சந்தேகிக்கிறது.
இந்த நிலையில் தைவானுடனான தகவல் தொடர்பினை சீனா முறித்துக்கொண்டு விட்டதாக நேற்று அறிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.