Designed by Iniyas LTD
தொடரும் சிறி.கடற்படையினரின் அட்டூழியம் –28 தமிழக மீனவர்கள் கைது
தமிழகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 28 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியிலிருந்து மீன் பிடிக்க சென்ற 19 மீனவர்கள் 3 நாட்டு படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து 3 நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அதே போன்று, ராமேஸ்வரத்திலிருந்து சென்ற 9 மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு விசை படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் கல்பட்டி மற்றும் காங்கேசன் துறைமுகங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.