Designed by Iniyas LTD
தொடர்வண்டி தடம் புரள்வு – திருமலை கோட்டை புகையிரத சேவை ரத்து
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடர்வண்டி தடம்புரண்டுள்ளதால் திருகோணமலை மட்டக்களப்புகளுக்கான தொடர்வண்டி சேவை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டையில் இருந்து இன்று சனிக்கிழமை 05/07/2014 அதிகாலை திருகோணமலை நோக்கி பயணித்த தொடர்வண்டி கெக்கிராவ மற்றும் பளுகஸ்வேவ பகுதிகளுக்கிடையில் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக திருகோணமலை மட்டக்களப்புக்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து செல்லவுள்ள புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.