Designed by Iniyas LTD
தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு தமிழ்த தேசியப் பேரியக்கம் அழைப்பு!
பெறுநர்
செய்தி ஆசிரியர் / செய்தியாளர்
பேரன்புடையீர், வணக்கம்.
வேலைதேடித் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 95 இலட்சம் பேர். ஆனால் இதே தமிழ்நாட்டில் உள்ள ரெயில்வே, பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., வருமானவரி, உற்பத்தி வரி அலுவலகங்கள் முதலியவற்றில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மொத்த ஊழியர்களில் 40 விழுக்காடு, 30 விழுக்காடு அளவிற்கு வேலை பார்க்கிறார்கள். மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கமே சிதைக்கப்படுகிறது.
மேற்கண்ட இந்திய அரசு நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காடு வேலைகளை வழங்கிட ஆணை பிறப்பிக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தியும், வெளி மாநில ஊழியர் சிக்கல் பற்றி கர்நாடக அரசு அமைத்த சரோஜினி மகிசி ஆணையம் போல் தமிழக அரசு ஓர் ஆணையம் அமைக்க வலியுறுத்தியும், வருகின்ற 12.12.2014 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்) என் தலைமையில் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. இதுபற்றி செய்திகளை தங்கள் இதழில் / தொலைக்காட்சியில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தியாளர் சந்திப்பு அழைப்பு
இடம் : சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை
நாள் : 10.12.2014 புதன் காலை 11.00 மணி
செய்தியாளர்களுக்கு அழைப்பு
தொடர்வண்டி மறியல் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் மற்றும் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர்கள் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு, 10.12.2014 அன்று காலை 11 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வுக்கு, தங்கள் ஊடகத்தின் செய்தியாளர்களை அனுப்பி வைக்குமாறு, தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்