தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

த தே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

Piyasena_CI (1)தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பிய சேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி,கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டி ருந்தது.
அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது.
எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சாரதி நேற்று முன்தினமே சாரதியாக இணைந்து கொண்ட வர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தசம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...