தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

த.மா.கா. கட்சிக்கு தமிழகத்தில் மக்கள் ஆதரவு அதிகம் – ஞானதேசிகன்

திண்டுக்கல்லில் இன்று தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முத்த தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்டார்.gnadesikan

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

வருகிற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை கேட்பதற்காக மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறோம். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு இறுதியில் பிப்ரவரி மாதம் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பார். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழ்மாநில காங்கிரஸ் பலமான கட்சியாக உள்ளது. இதுவரை எந்த கட்சி கூட்டணியும் இறுதி செய்யப்படவில்லை. தேர்தல் வரும்போதுதான் இறுதி வடிவம் பெறும். எங்கள் கட்சிக்கு தமிழகத்தில் மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. மது விலக்கு கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

செம்பரப்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணை தேவை என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். எங்களைப் பொருத்தவரை இப்பிரச்சினையில் நீதி விசாரணை தேவையில்லை. அதே வேளையில் விழுப்புரம் அருகே 3 மாணவிகள் இறப்பு குறித்து பல்வேறு சந்தேககங்கள் எழுகின்றன. கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததோடு மாணவிகள் துன்புறுத்தப்பட்டனரா? கட்டண கொள்ளை நடந்ததா? என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். மக்கள் நலக்கூட்டணி எங்கள் கட்சியின் ஆதரவை கோரியுள்ளனர்.

இது குறித்து கட்சியின் தலைவரே முடிவு செய்வார். அந்த கூட்டணியினர் மாற்றுப்பாதையில் பயணித்து செல்கின்றனர் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர் ஷாஜகான், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமதாஸ், பொருளாளர் சுரபி பழனிச்சாமி, மாநில பொதுச் செயலாளர் மச்சக்காளை, நகர செயலாளர் சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Comments
Loading...