Designed by Iniyas LTD
நடந்ததும் – நடப்பதும் – நடக்கப் போவதும்?
கடந்த 26ம் திகதி இரவு மைத்ரிபால முன் மகிந்த பிரதமரானார்.
அது சரியா? பிழையா? என்பதை சட்ட வல்லுனர்கள் பார்த்துக் கொள்ளட்டும்!
நாங்கள் சட்ட அறிஞர்கள் இல்லைதானே?
அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் நாங்கள் கடந்த காலத்துக்கு சற்று போவோம்.
மைத்ரியின் ஊடகம் கடந்த காலங்களில் என்ன சொன்னது.
நாமலை உரித்தெடுத்து அம்மணமாக்கியது.
பசிலை படு கள்ளன் என்று சொன்னது.
ஒரு டீம் அங்கே இருந்து அதைத்தான் செய்தது.
மைத்ரியின் மீடியாகாரர்களில் அப்படியானவர்கள்தான் இருந்தார்கள்.
இவர்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும்.
புதிதாக தலை மாறிய இவர்கள் புது கொசிப் (கிசு கிசு) தகவல் ஒன்றை வெளியிட்டார்கள்.
அதுதான் ….
அடுத்த பாதுகாப்பு செயலர் கோட்டா என ஒரு கிசு கிசுவை வெளியிட்டது.
இது உண்மையான தகவல்.
தலையை போடுவதற்கு முன் விரலை ஓட்டி பார்க்கும் முறை இது என்பார்கள்.
மற்றவர்கள் என்ன எதிர்வினையாற்றுகிறார்கள் என அறிவதே இந்த செய்தி கிசு கிசுவாக கொண்டு வரும் உத்தி.
மைத்ரி இரண்டு பதவிகளை கோட்டாவுக்கு கொடுக்க பரிந்துரைத்தார். தனது விருப்பத்தையும் சொன்னார்.
ஒன்று பிரதமரது செயலாளர்
இரண்டாவது பாதுகாப்பு செயலர்
ஆனால் கோட்டா இது எதுவுமே வேண்டாம் என்றார்.
மகிந்த காலத்தில் 9 வருடங்கள் கோட்டா பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ளார்.
இது எல்லோருக்கும் தெரியும்.
ஏன் முடியாதென்றார்?
தனது உடன் பிறப்பான அண்ணன் சட்டப்படி அல்லது சட்டத்துக்கு முரணனான விதத்தில் தற்போது பிரதமர் !அப்படி தனது அண்ணன் மகிந்த.
ஆனால் ஏன் இந்த பதவிகளை கோட்டா வேண்டாம் என்றார்?
இது உங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லையா?
அடுத்த விடயத்துக்கு போவோம்.
அதாவது அனைத்து வெளிநாட்டு தூதரங்களும் – 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் – பாதி மக்களும் தெரிந்த ஒரு விடயம் உள்ளது.
அவர்தான் இரவு பகலாக பணப் பேரம் பேசி ஆட்களை இழுக்க பணம் வழங்கும் நபர் பசில் என்பது.
பசில்தான் பண பட்டுவாடா செய்ய டிபென்டர்களில் கட்டு கட்டாக பணத்தை கொண்டு சென்றார்.
பசில்தான் அனைவரிடமும் டீல் பண்ணி எல்லாவற்றையும் செய்கிறார்.
முன்னர் திருடிய பணம் முழுவதும் பசிலிடம்தான் இருக்கிறது. அதை செய்து வந்த பசில் திடீரென பின் வாங்குகிறார். என்ன நடந்தது?
திடீரென மைத்ரிக்கு ஒரு தகவலை அனுப்புகிறார்.
113 பேரை இணைப்பதில் எனது பங்களிப்பு இனி இல்லை என்பதே அந்த தகவல்.
இதுவரை மகிந்தவை பதவிக்கு கொண்டு வர இரவு – பகல் பாராது உழைத்த பசில் ஏன் திடீரென மாறினார்?
இந்த மகிந்தவின் சகோதரர்களது இரு மறுப்புகளின் பின்னால் ஒரு பலமான செய்தி உள்ளது.
அதாவது கோட்டாவுக்கு பாதுகாப்பு செயலர் பதவி வேண்டாம்.
பசில் இப்படி பின் வாங்கி இனி தனது பங்களிப்பு இல்லை என்கிறார்.
ஏன் இப்படி? இப்படி ஆகுமா?
இவர்கள் மகிந்தவோடு ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள். சகோதரர்கள்!
பிரச்சனை இதுதான்!
இதை நாடும் நாமும் அறிந்து கொள் வேண்டும்!
இதை ஊடகங்கள் சொல்வதில்லை.
இப்போது ஊடகங்கள் அடிமையாகிவிட்டன.
இலங்கை சட்டத்தை மட்டுமே பார்த்த இவர்கள் சர்வதேச சட்டங்களை பார்க்க தவறினார்கள்.
சில தினங்களுக்கு முன் உலகின் பலமான சில நாடுகள் கடுமையான ஒரு செய்தியை தெரிவித்தது.
அதாவது
அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா – யப்பான் – கனடா ஆகியவை இலங்கைக்கு எதிராக டிரவல் பாண்ட் ஒன்றை போட்டது.
அதாவது பயணத் தடை ஒன்றை போட்டது.
113 பெரும்பான்மையை மகிந்த பாராளுமன்றத்தில் காட்டத் தவறினால் பசில் – கோட்டா இருவரும் ஒரு நாட்டுக்குள் அரசியல் சதிச் செயலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றவாளிகளாக சர்வதேச குற்றவியல் தொடர்பாக நிறுத்தப்படுவார்கள்.
ஆனால் இவர்களால் அமெரிக்கா செல்ல முடியாதா?
ஏன் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது.
அவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமையை வைத்திருப்பவர்கள்தானே?
இப்போதுதான் அவர்கள் தாம் பின்னிய வலையில் தாமே மாட்டிக் கொண்டதை உணர்ந்தார்கள்.
இருவரும் கடும் சிக்கலில் மாட்டியுள்ளார்கள்.
அமெரிக்க குடியுரிமையை இருவரும் விடுவித்துக் கொள்ளவுமில்லை.
அதற்கு காரணம் பசி – கோட்டா இருவரது அதிகமான சொத்துகள் அமெரிக்காவில்தான் உள்ளதுதான்.
இது நமக்கே தெரியும் போது இந்த நாடுகளுக்கு தெரியாதா என்ன?
இதனால் அமெரிக்க குடியுரிமையை இழக்க முடியாது.
பயணத் தடையொன்று வந்து இந்த இருவரும் ஒரு நாட்டின் சதிக்கு காரணமானார்கள் என விசாரணைகளில் வெளிவந்தால் கதை முடிந்தது.
இப்போதே அமெரிக்காவுக்கு வர முடியாதென அவர்கள் இருவருக்கும் தடை விதித்து விட்டார்கள்.
இந்த உண்மையை ஊடகங்கள் இதுவரை சொல்லவில்லை. இப்போதைய நிலையில் வாய் திறப்பார்களா? ம்ஊகும் ….
இனி யார் அவர்களது சொத்துகளின் வாரிசுகளாவது நாங்களா?
கோட்டா வியத் மக என ஒரு அமைப்பை உருவாக்கினார்.
எலிய (ஒளி) என ஒரு அமைப்பை உருவாக்கினார்.
இதுபோக உண்மையாகவே மகிந்தவுக்கு ஒரு ஒளிமயமான வாய்ப்பு இருந்து வந்தது. அதை அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை யாரும் மறுப்பதற்கில்லை.
கோட்டாவுக்கும் ஒரு டிரென்ட் இருந்தது. ஒரு பௌத்த தேரர் ஹட்லர் கதையை சொல்லி ஒன் த ஸ்பொட் கோட்டாவை இல்லாமல் பண்ணினார்.
அது எதுக்கோ முன்னால் வந்த வாய்வு போன்ற நாறின வாய் கிழிந்த வேலை.
மேலே உள்ள விடயங்கள் அனைத்தும் கோட்டாவை ஜனாதிபதியாக்கும் எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இது எல்லோருக்கும் தெரியும். இது ரகசியமே அல்ல.
அடுத்து
113 பெரும்பான்மையை கோட்டா – பசில் சேர்ந்து மகிந்தவுக்கு பாராளுமன்றத்தில் காட்ட வைக்க முடிந்தால் …….. அது முடியுமா என்பது விரைவில் தெரியும்!
பின்னர் 2/3யை மகிந்தவால் உருவாக்குவது வெரி சிம்பள். அது மகிந்தவுக்கு பொங்கல் சாப்பிடுவது போல ஒரு வேலை.
113 மகிந்தவுக்கு கிடைத்தால் அடுத்த அதிரடி மகிந்த 2/3டை உருவாக்குவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதன் பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வார்.
பழையபடி18வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து தான் தொடர்ந்து ஜனாதிபதியாக முடியும் என சட்டத்தை மாற்றுவார்.
கிழிஞ்சது போ!
அதாவது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தேர்தல் அபேட்சகர் மைத்ரி அல்ல மகிந்த.
இப்போது கோட்டாவுக்கு 69 வயது.
மகிந்தவின் வயது என்ன?
2025 வரை மகிந்த ஜனாதிபதியானால் அவரது வயது 78 – 79 ஆகும். அப்போது கோட்டாவுக்கு 74 – 75 ஆகிடும்.
இது நாம் சிந்திக்க வேண்டிய விடயம். ஒரு நாட்டின் சாதாரண குடிமனனொருவனால் இதைக் கூட சிந்திக்க முடியாதா? அவ்வளவு தெளிவு பஞ்சமா?
இதற்கு பெரிய அறிவாளியாக வேண்டியதில்லை.
மகிந்தவுக்கு 78 – 79 ஆகும் போது அவரது ரிலே போட்டி ஆட்ட பொல்லை யார் கையில் கொடுப்பார்?
அவரது இரத்த மகன் நாமலுக்குத்தான்.
கோட்டாவுக்கு அல்ல. இதுதான் கதை!
இது அடிமைகளாக தொடர்ந்து இருக்கும் எமக்கு நல்ல அரசியல் பாடங்கள்.
இதை உணருங்கள்.
😎தர்சண ஹந்துன்கேயின் அரசியல் பார்வையின்
மொழி பெயர்ப்பு – அஜீவன்