தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதம் ஆக அறிவித்துள்ள அமெரிக்க ஆளுநர்…

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர் நடப்பு ஜனவரி மாதத்தை “தமிழ் கலாச்சார மாதம்” ஆக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக வடக்கு கரோலினா மாநிலம் உள்ளது.

அங்குள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் சங்கத்தினர் நடப்பு ஜனவரி மாதத்தை “தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு” மாதமாக அறிவிக்க  வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையி அவர்களின் வேண்டுகோளை ஆளுநர் ராய் கூப்பர் ஏற்று அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ் மொழி” அனைத்து மொழிகளுக்கெல்லாம் அடையாளமாக விளங்குகிறது என்றும், உலகில் பேசப்பட்டு வரும் மொழிகளுக்கெல்லாம் முதன்மையான அடையாளமாக  தமிழ் மொழி விளங்குகிறதாகவும்  புகழ்ந்துள்ளார் .

மேலும் இம்மொழி உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற   தமிழ் மொழியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நாட்டின் சமூக, பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும்  ஆளுநர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் தமிழ் சமூக மக்கள் 4 நாட்கள் கொண்டாடுகிற அறுவடை திருநாளான “பொங்கல் பண்டிகை” பற்றியும் புகழ்ந்து வீடியோவில் பேசியுள்ளார்.

மேலும்  அங்குள்ள தமிழர்கள், தமிழ் மொழியின் கலாச்சாரத்தை எப்போதும் பாதுகாத்து வருவது மட்டுமல்லாமல், வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிந்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே 2019 ஜனவரி மாதத்தை அனைத்து மக்களுக்கும் ” தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதம்” ஆக அனுசரிக்குமாறு கேட்டுக்கொள்வதாக வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...