Designed by Iniyas LTD
நடிகர் விஜய்க்கு கோவில்..! மாலை போட்டு விரதம்..! செருப்பால் அடித்து விரட்டிய ஊர் மக்கள்!
மதுரைப் பசங்க எப்பவுமே பாசக்காரப் பயலுவ.! ஒருத்தரைப் பிடித்துப்போனால் பாசத்தின் எல்லை வரை போய்விடுவார்கள். பிடிக்கவில்லை என்றால் ஊர் எல்லை வரை விரட்டி விரட்டி வெட்டுவார்கள்.
இளையதளபதி விஜய்யை ரொம்ப ஓவராகப் பிடித்து விட்டது போல. கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தி விட்டார்கள்.
விஜய் இவர்களின் குல சாமியாம். வருடா வருடம் மாலை போட்டு, பச்சைவண்ண ஆடை மட்டுமே உடுத்தி, விரதம் இருக்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். அதன் பின் சென்னைக்கு வருகிறார்கள்.
இளைய தளபதி வீட்டிற்கு வந்து அவரைப் பார்க்கிறார்களோ இல்லையோ அவரின் வீட்டின் முன் மாலையை கழட்டி விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
ஊர் மக்கள் பார்த்தார்கள். இவனுக தொல்லை தாங்க முடியவில்லை என்று கூறி ஒன்று திரண்டு விஜய் கோவிலை துவம்சம் செய்து விட்டார்கள்.
இப்போது இந்த இளைஞர்கள் மானசீகமாக தங்கள் குலசாமியை மனதுக்குள் வழி படுகிறார்கள்களாம்
அட ராமா…ராமா.!
