தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நடிகர் விமல் மீது வழக்குப்பதிவு…

கன்னட நடிகரைத் தாக்கியதாக களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு ஆர்.டி. நகரைச் ((RT)) சேர்ந்தவர் அபிஷேக். கன்னட நடிகரான இவர், தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதற்காக  அவர்  சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார்.

நேற்றிரவு அந்த குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்த போது, நடிகர் விமல் தனது நண்பர்கள் 4 பேருடன் மதுபோதையில் அங்கு சென்று  அபிஷேக்கை வரவேற்பறை ஊழியர் என நினைத்து விமல் அறை கேட்டதாகவும், இதனால் அபிஷேக் கோபமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே நடிகர் விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அபிஷேக்கை அடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

காயம்பட்ட அபிஷேக், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், தாக்குதல் தொடர்பாக விருகம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில்   விமல் படபிடிப்புக்காக வெளியூர் சென்று விட்டதாகவும், விசாரணைக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும்   விருகம்பாக்கம் போலீசார் கூறியுள்ளனர்.

Comments
Loading...