Designed by Iniyas LTD
நடிகை அனுஷ்கா ஷர்மாவை கரம் பிடித்தார் இந்திய கேப்டன் விராட்..!
விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இன்று மாலை திருமணம் நடந்துள்ளது. பலவருடங்களாக காதலித்து சர்ச்சைகள் அதிகமாக எழுந்து வந்தது விராட் – அனுஷ்கா ஜோடிக்கு. இதை தவிர்க்கும் வகையில் இலங்கை தொடரில் ஓய்வு பெற்ற விராட், அனுஷ்கா மற்றும் தன் குடுபத்தினருடன் இத்தாலிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இத்தாலி டஸ்கனி பிராந்தியத்தில் ஆடம்பர ரிசார்ச் ஒன்றில் இன்று மாலையில் விராட் கோலிக்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அனுஷ்கா ஷர்மா-விராட் கோலியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.