தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நடுக்கடலில் தத்தளித்த 5 தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்பு!

tn fishermanபுதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் காலை 5 பேர் கொண்ட குழு படகில் மீன்பிடிக்க சென்றனர். மண்டபத்தில் இருந்து 34 நாட்டிக்கல் மைல் தொலைவில், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பலத்த காற்று வீசியதால் படகு மூழ்கியது.

படகில் இருந்த மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக ஜெயபால் என்பவரது படகில் வந்த மண்டபம் மீனவர்கள், இவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதன்பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Comments
Loading...