தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நந்திக்கடலின் கரையில் மிதிவெடிகள்.

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் தற்போதும் மிதிவெடிகள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் நந்திக்கடல் பகுதியிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

எனினும், யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களை கடந்த நிலையிலும் நந்திக்கடல் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் மிதிவெடிகள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

மீன்பிடிப்பதை வாழ்வாதாரத்தொழிலாக செய்யும் அப்பகுதி மக்கள் நந்திக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் இந்த மிதிவெடிகள் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Comments
Loading...