Designed by Iniyas LTD
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய புதிய குழு நியமிப்பு…
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதாவது கடந்த 2015 ஜனவரி 14ஆம் திகதியிலிருந்து 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, குறித்த குழுவை அவர் நியமித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபயரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவில் மேலும் 4 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளராலேயே இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்லமை குறிப்பிடத்தக்கது.