Designed by Iniyas LTD
நளினியை சந்திக்க மறுத்த முருகன்
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையிலும் முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கோர்ட்டு உத்தரவுபடி 15 நாட்களுக்கு ஒருமுறை முருகன் தனது மனைவி நளினியை சந்தித்து வருகிறார்.
அதன்படி, முருகன், நளினியை நேற்று சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் நளினியை சந்தித்து பேச முருகன் விருப்பம் தெரிவிக்கவில்லை. மனைவி நளினியை சந்திக்க வேண்டுமெனில் ஜெயில் அதிகாரிகளிடம் முருகன் விருப்ப மனு கொடுக்க வேண்டும். ஆனால், இம்முறை நளினியை சந்திக்க அவர் மனு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.