Designed by Iniyas LTD
நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: கலால் வரி உயர்வு
பெட்ரோல், டீசல் சிலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, விலைக்குறைப்பின் பலன் சாதாரண மக்களுக்கு சென்றடையவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது. இதன் பலனை மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. கலால் வரி பெட்ரோலுக்கு 75 காசுகளும், டீசலுக்கு ரூ. 2ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 3700 கோடி வரை கிடைக்கும் எனத் தெரிகறது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இரு முறை உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை 85 காசுகளும் மட்டுமே நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.