Designed by Iniyas LTD
நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல்…
இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இம் மாதம் 15ஆம் திகதிக்கு முதல் கிராம சேவகர் ஊடாக விநியோகிக்கப்படவிருக்கும் வாக்காளர் பதிவு விண்ணப்பப் படிவங்களைப் பொதுமக்கள் பெற்று விண்ணப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு 2020 ஆ ம் ஆண்டு கண்டிப்பாக 3 தேர்தல்களை எதிர்கொள்ளும் ஆண்டாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலின்போது இறுதி ஆண்டு வாக்காளர் இடாப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியல் மூடினால் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடுத்த ஆண்டு இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மட்டுமன்றி வாக்காளர் பதிவும் மிக முக்கியமானது என்றும், வாக்களர் பதிவு தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் முதல் சாதாரண குடிமகன் வரையில் வாக்காளர் பதிவு தொடர்பில் போதிய அக்கறையின்மை காணப்படுகின்றதாகவும், மக்களின் உரிமையில் மிக உச்சமானது வாக்குரிமையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் விநியோகம் செய்யப்பட்ட வாக்காளர் படிவங்கள் ஜூன் 14ஆம் திகதிக்கு முன்பு வீடுகளிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் பொது அறிவித்தல் வழங்கினாலும் ஊடகங்களின் பங்கே மிக முக்கியமானது எனவும்
யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.