Designed by Iniyas LTD
நாகை மாவட்ட கலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்கின்றார் புனியா
நாகை மாவட்டம் திருநாள்கொண்டசேரி கிராமத்தில், இறந்தவரின் உடலை, பொது வழியில் கொண்டு செல்ல முற்பட்டபோது, கலவரம் ஏற்பட்ட பகுதிகளில், இந்திய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ஆணையர் தலைவர் புனியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
நாகை மாவட்டம் திருநாள்கொண்டசேரி கிராமத்தில் கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்த செல்லமுத்து என்ற முதியவரின் உடலை, பொது வழியில் கொண்டு செல்ல, அந்த கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு பிரிவினர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று, உயிரிழந்தவரை கொண்டு செல்ல முற்பட்ட போது, காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் திருநாள்கொண்டசேரி கிராமத்திற்கு நேற்று வருகை தந்த தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ஆணையர் தலைவர் புனியா, மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகளுடன் சென்று நேரில் விசாரணை நடத்தினார்.
செல்லமுத்துவின் வீட்டிற்கு சென்று உறவினர்கள் மற்றும், சுற்றுப்புற மக்களிடமும் விவரங்களை கேட்டறிந்தார். காவல்துறை அதிகாரிகளிடமும் புனியா விசாரணை மேற்கொண்டார்.