தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிப்பு: ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

02-1451716750-nanjil-sampath-6600அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இன்று பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடம் ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...