தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாடாளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல ஜனாதிபதி யோசனை…

நாடாளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல ஜனாதிபதி மைத்திரிபால  கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் வாக்குரிமையை சபாநாயகர் கரு ஜயசூரிய பாரதூரமான வகையில் தரம் தாழ்த்தி உள்ளதால்,

அதனை மீண்டும் நிலைநாட்ட எஞ்சியிருக்கும் ஒரே மாற்று வழி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது என்பதே ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களின் நிலைப்பாடு எனவும்  தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா எனக் கோரி இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னர்  முன்னெடுக்கப்படலாம் என மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.

Comments
Loading...