Designed by Iniyas LTD
நாடாளுமன்றில் இன்று பொதுமக்களுக்கு தடை…
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் நாடாளுமன்றில் பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட கலரியில் இன்று தடை போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் கலரியிலிருந்து நாடாளுமன்றச் செயற்பாடுகளை அவதானிப்பதற்கான சந்தர்ப்பம் பொதுமக்க்ளுக்கு வழங்கப்படாதென அறியமுடிகின்றது.
கடந்த வாரங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சீரின்மையையடுத்து நாடாளுமன்றிலும் கடும் குழப்பங்கள் நிலவியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிரைகள், புத்தகங்கள் மற்றும் மிளகாய்த்துள் என்பனவற்ரைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரக்கூடும் என்பதனாலேயே பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
