தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்திற்காக 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள்..

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்திற்காக 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு, அந்த நாட்டு குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (17) குறித்த கையெழுத்துக்கள்
குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், அவர்களை நாடுகடத்தக் கூடாது என வலியுறுத்தி 190,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு குடிவரவு அமைச்சர் டேவிட் கொல்மனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நடேசலிங்கம்-பிரியா தம்பதிக்காக அவர்கள் வாழ்ந்து வந்த அவுஸ்திரேலியாவின் பிலோலா சமூகத்தினர் இந்த கையெழுத்து திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...