தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வாகனங்கள் இரண்டு மீட்பு…

நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் வாகனங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த லொறியுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை நாயக்ககந்த பகுதியில் வைத்தே (WP VAE 4197) என்ற இலக்கமுடைய லொறி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியிலும் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட லொறி ஒன்றுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...